சவால்களை வெற்றி கொண்டு நாட்டை அபிவிருத்திப் பாதைக்கு இட்டுச் செல்ல அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக பிரதமர் கூறுகிறார்.

Share Button

மத்தியதர வர்க்கத்தினருக்காக நிர்மாணிக்கப்பட்ட பிரதான வீடமைப்புத் திட்டம் ரணால ஜல்தறையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைவர் இன்று பொது மக்களிடம் கையளிக்கப்பட்டது. அரசாங்கம் மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து முன்னெடுத்த இந்த வேலைத்திட்டத்திற்கு கிறீன்வெலி ரெசிடன்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளுக்காக 160 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதுடன் 8 ஏக்கர் விசாலமான பரப்பில் இந்த மாடி வீட்டுத் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

இதில் 352 வீடுகள் காணப்படுகின்றன. ஒவ்வொரு வீடும் ஏழு தசம் ஐந்து தொடக்கம் ஏழு தசம் ஒன்பது மில்லியன் ரூபா வரை பெறுமதி கொண்டது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த வீடுகளை கொள்வனவு செய்ய விரும்புவோர் முதலில் மொத்த தொகையின் 20 வீதத்தை செலுத்தி, மீதித் தொகையை வங்கிக் கடன் மூலம் செலுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்ய முடியும். இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர்
சவால்களை வெற்றி கொண்டு நாட்டை அபிவிருத்திப் பாதைக்கு இட்டுச் செல்ல அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக குறிப்பிட்டார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *