தமது ஜனாதிபதி வேட்பாளரை விரைவில் அறிவிக்கவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவிப்பு

Share Button

தமது ஜனாதிபதி வேட்பாளரை விரைவில் அறிவிக்கவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார். வேட்பாளர் தெரிவு ஜனநாயக முறைப்படி இடம்பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வேட்பாளரை தெரிவு செய்வதற்கான சகல நடவடிக்கைகளும் தயார்படுத்தப்பட்டுள்ளதாக ஊடக அறிக்கை ஒன்றின் ஊடாக, அமைச்சர் கபீர் ஹாசிம் இதனை குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய தேசிய கட்சி முன்னிறுத்தும் வேட்பாளர் தாய்நாட்டை நேசிக்கும் ஜனநாயகவாதி தலைவராக இருப்பார் எனவும் அவர் மக்களாலோ நீதிமன்றத்தாலோ குற்றவாளியாக இனங்காணப்படாத ஒருவர் எனவும் அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *