எதுவித பேதமும் இன்றி நாடு முழுவதிலும் அபிவிருத்தி மறுமலர்ச்சியைத் தொடங்கப் போவதாக அமைச்சர் சஜித் பிரேமதாச வலியுறுத்தல்

Share Button

ஆட்சி நிர்வாகத்தில் மாத்திரமன்றி நாட்டின் எதிர்காலப் பயணத்திலும் பொதுமக்களே சிறந்த பிரதான பங்குதாரர்களாக இருக்க வேண்டும் என அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். புதிய படைப்புக்கள் மூலம் நாட்டை துரித அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்லக்கூடிய ஒருவருக்கே இதற்குரிய காரியங்களை நிறைவேற்ற முடியும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

நாடு அபிவிருத்தி காண வேண்டுமானால், சிரிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களுக்கு நிவாரணம் வழங்கி உள்ளுர் வர்த்தகர்களை வலுப்படுத்த வேண்டும். இளைய தலைமுறையின் சிந்தனைகளைக் கண்டறிவது அவசியம். நினைத்தபடி கொள்கைகளை உருவாக்கி நாட்டை அபிவிருத்தி
செய்ய முடியாது. இதற்கு தேசிய திட்டமும் இலக்குகளும் அவசியம் என அமைச்சர் குறிப்பிட்டார்.

நேற்று பதுளை வில்ஸ் பூங்காவில் இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றினார். ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவை பெயரிடுமாறு கோரி ஊவா வெல்லஸ்ஸ மக்கள் பேரணியை ஏற்பாடு செய்திருந்தார்கள்.

தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கு திடசங்கற்பம் பூண்டுள்ளதாக குறிப்பிட்டார். தேசிய பாதுகாப்பு என்பது இராணுவப் பாதுகாப்பு மாத்திரம் அல்ல. அது அரசியல் சமூக பொருளாதாரப் பாதுகாப்பையும் சார்ந்ததாகும். மத்திய தர வர்க்கத்தை வரிச்சுமையில் இருந்து நீக்குவது அவசியம். எதிர்காலத்தில் சகலரும் வெற்றிபெறக் கூடிய திட்டத்தை அமுலாக்கப் போவதாக அமைச்சர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *