தாய்லாந்தில் சீரற்ற காலநிலையால் கடும் பாதிப்பு – மியன்மார் மண்சரிவில் 56 பேர் பலி

Share Button

உலகின் பல நாடுகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள சீரற்ற காலநிலையால் வெள்ளம் மற்றும் மண்சரிவினால் 220ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. பல மில்லியன் கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் பல மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் 200 பேர் வரை உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரள மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் மாத்திரம் 70 பேர் உயிரிழந்திருப்பதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

சீனாவுக்குப் பாதிப்பை ஏற்படுத்திய லெகீமா சூறாவிள காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. 16 பேர் தொடர்ந்தும் காணாமல் போயிருப்பதாக சீனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மில்லியன் கணக்கானோர் அங்கும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே வியட்நாமில் ஏற்பட்டுள்ள விஃபா சூறாவளியினால் பலியானவர்களின்எ ண்ணிக்கை 24 ஆக உயர்வடைந்துள்ளது. 6 பேர் காணாமல் போயுள்ளனர். வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு காரணமாக மூவாயிரத்து தொள்ளாயிரம் வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

பாகிஸ்தானும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது. 17 பேர் அங்குள்ள உயிரிழந்துள்ளனர். 180 மில்லி மீற்றர் வரையான கடும் மழை கராச்சியில் பெய்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

சீரற்ற காலநிலையால் தாய்லாந்தும் கடுமையான பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளது. இதேவேளை, மியன்மாரில் ஏற்பட்ட மண்சரிவினால் 56 பேர் பலியாகியுள்ளனர். பலர் காணாமல் போயிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *