ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இரண்டு வாரங்களில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளவுள்ளது

Share Button

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தமது இறுதித் தீர்மானத்தை இன்னும் இரு வாரங்களில் மேற்கொள்ளும் என கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆண்டு நிறைவு எதிர்வரும் மாதம் 2ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில், கலந்துரையாடல்களை மேற்கொண்டு விரிவான கூட்டணியொன்றை உருவாக்குவதற்கு முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். எந்த காரணத்திற்காகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை தாமரை மொட்டால் கலைத்துவிட தயார் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார். அனுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இரு தரப்புக்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது. இனிவரும் காலங்களிலும் பேச்சுவார்த்தை இடம்பெறும். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை தீர்மானிக்கும் முக்கிய சக்தியாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியே இருக்கும் என அவர் குறிப்பிட்டார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *