பாடசாலை மாணவர்களின் ஆங்கில மொழி திறமை மேம்படுத்த நடவடிக்கை

Share Button

பூகோள கல்வி இலக்கை வெற்றி கொள்வதற்காக பாடசாலை மாணவர்களின் ஆங்கில மொழி திறமை மேம்படுத்தப்படும் என அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். இதற்கென தேசிய கல்வி நிறுவகத்திற்கு வழங்கப்பட்டுள்ள பாடவிதானத்தை வினைத்திறனாக பயன்படுத்தி ஆங்கில மொழி கல்விக்கான செயற்றிட்டங்களை தயாரித்து ஆசிரியர்களுக்கான சுற்றுநிரூபங்களும் ஆலோசனை வழிகாட்டல்களும் வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் கூறினார்.

இதேவேளை, அடுத்த வருடத்திற்கான பாடப்புத்தகங்களை வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தலைமையில் கல்வி வெளியீட்டு திணைக்களத்தின் களஞ்சியத்தொகுதியில் இடம்பெறவுள்ளது. இதற்கென நான்காயிரத்து 165 மில்லியன் ரூபாவை அரசாங்கம் வழங்கவுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *