சுற்றுலா நியூஸிலாந்து அணிக்கும் – இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பம்

Share Button

சுற்றுலா நியூஸிலாந்து அணிக்கும் – இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பமாகின்றது. இந்த போட்டி, காலியில் காலை 10 மணி அளவில் ஆரம்பமாகவுள்ளது.

இந்த டெஸ்ட் போட்டியில் பெயர் மற்றும் எண்கள் பொறிக்கப்பட்ட புதிய ஜெர்சியை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

அணி வீரர்கள் வெறும் வெள்ளை நிற உடை அணியாமல் அந்த வெள்ளை நிற உடையில் தங்களது பெயர் மற்றும் எண்கள் பொறிக்கப்பட்ட ஜெர்சியுடன் விளையாடவுள்ளனர்.

ஒருநாள் மற்றும் ரீ-20 போட்டிகளில் வீரர்கள் தங்களின் ஜெர்சியில் பெயர் மற்றும் எண்களுடன் விளையாடி வருகின்றனர்.

எனினும் டெஸ்ட் போட்டியில் பெயர் மற்றும் எண் இல்லாமல் இருந்து வந்தது.

இந்தநிலையில், வரலாற்றில் முதல் முறையாக டெஸ்ட் போட்டியில் பெயர் மற்றும் எண் பொறிக்கப்பட்ட ஜெர்சிகளை ஐ.சி.சி கடந்த முதலாம் திகதி அவுஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஆஷஸ் தொடரின் முதல் போட்டியின்போது அறிமுகப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ழூ ழூ ழூ

அவுஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்துக்கு இடையிலான வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் போட்டித் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது. லண்டன் லோட்ஸ் மைதானத்தில் இந்தப் போட்டி இடம்பெறவுள்ளது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *