2022ஆம் ஆண்டு பொதுநலவாய போட்டிகளில் மகளிர் ரி-20 போட்டிகள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளன

Share Button

2022ஆம் ஆண்டு பர்மிங்ஹாமில் இடம்பெறவுள்ள பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் மகளிருக்கான ரி-20 கிரிக்கட் போட்டிகள் இடம்பெற்றுள்ளன. பொதுநலவாய விளையாட்டு சம்மேளனம் இன்று இது தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவித்தலை வெளியிட்டுள்ளது. ரி-20 போட்டிகளில் எட்டு அணிகள் பங்குகொள்ளவுள்ளன.

இதேவேளை, இம்முறை ரி-20 கிரிக்கட் போட்டிகளுக்கு மேலதிகமாக மேலும் இரண்டு போட்டிகள் பொதுநலவாய போட்டிகளில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. கடற்கரை கரப்பந்தாட்டப் போட்டி, பரா டேபிள் டென்னிஸ் ஆகிய விளையாட்டுக்களே இவ்வாறு சேர்க்கப்பட்டுள்ளன.

பொதுநலவாய போட்டிகளில் ஆண்களுக்கான 50 ஓவர்களைக் கொண்ட மட்டுப்படுத்தப்பட்ட கிரிக்கட் போட்டி 1998ஆம் ஆண்டு மலேசியாவில் இடம்பெற்றது. அந்தப் போட்டியில் தென்னாபிரிக்க அணி தங்கப் பதக்கத்தை வென்றது. அதற்குப் பின்னர் பொதுநலவாய போட்டிகளில் கிரிக்கட் இடம்பெறவில்லை. 2022ஆம் ஆண்டுக்கான பொதுநலவாய போட்டிகள் இங்கிலாந்தில் ஜூலை 27ஆம் திகதி தொடக்கம் ஆகஸ்ட் 7ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *