மேற்கிந்திய தீவுகள் அணியுடனான ஒருநாள் கிரிக்கட் தொடரை இந்தியா கைப்பற்றியுள்ளது

Share Button

சுற்றுலா இந்திய அணிக்கும், மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இடையிலான ஒருநாள் கிரிக்கட் தொடரை இந்திய அணி 2க்கு பூஜியம் என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. Pழசவ ழக ளுpயinஇல் இடம்பெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. போட்டியின் இடைநடுவில் மழை குறுக்கிட்டதால், போட்டி 35 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது. அதன்படி, மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 35 ஓவர்களில் 7 விக்கட்டுக்களை இழந்து 240 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில் கிறிஸ் கேல் 41 பந்துகளில் 72 ஓட்டங்களை பெற்றார்.

தொடர்ந்து மழை குறுக்கிட்டதால், டக்வர்த் லுயிஸ் முறைப்படி இந்திய அணிக்கு 35 ஓவர்களில் 255 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்திய அணி 32 தசம் 3 ஓவர்களில் 4 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில் அணித் தலைவர் விராட் கொஹ்லி ஆட்டமிழக்காமல், 114 ஓட்டங்களையும், ஸ்ரெயாஸ் ஐயர் 65 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். போட்டியின் சிறப்பாட்டக்காரராகவும், தொடர் ஆட்ட நாயகனாகவும் விராட் கொஹ்லி தெரிவானார்.
=====
சுற்றுலா நியூசிலாந்து அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது ரெஸ்ட் கிரிக்கட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடரவுள்ளது. தமது முதல் இனிஸ்சிற்காக துடுப்பெடுத்தாடிவரும் நியூசிலாந்து நேற்றைய முதல் நாள் ஆட்ட நிறைவின்போது 5 விக்கட்டுக்களை இழந்து 203 ஓட்டங்களை பெற்றிருந்தது. நியூசிலாந்து அணியின் வீழ்த்தப்பட்ட 5 விக்கட்டுக்களையும் அகில தனஞ்ஜெய கைப்பற்றினார். இவர் 57 ஓட்டங்களுக்கு 5 விக்கட்டுக்களை கைப்பற்றினார்.
இதேவேளை, இங்கிலாந்து – அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான ஆஷெஸ் ரெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி நேற்று ஆரம்பமாகவிருந்தது. லண்டன் லோட்ஸ் மைதானத்தில் இடம்பெற இருந்த போதிலும், மழை காரணமாக நேற்றைய தினம் போட்டி முற்றாக கைவிடப்பட்டது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11