இந்தியா தனது 73ஆவது சுதந்திர தினத்தை இன்று கொண்டாடுகிறது

Share Button

இந்தியாவின் 73ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் திகதி இந்தியா சுதந்திரம் பெற்றது. இந்த நிலையில் இது தொடர்பான பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அத்துடன், பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டிருப்பதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோதி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட பலர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, காஷ்மீர் மோதல்களுக்கு மத்தியில் பாகிஸ்தான் தமது 73ஆவது சுதந்திர தினத்தை நேற்று கொண்டாடியது. 1947ஆம் ஆண்டு பிரித்தானியாவிடமிருந்து பாகிஸ்தான் சுதந்திரம் பெற்றது. பிரதான நிகழ்வுகள் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இடம்பெற்றன.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *