எசல பெரஹரா சிறந்த முறையில் நிறைவடைந்ததன் மூலம் நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக இராணுவத் தளபதி தெரிவிப்பு

Share Button

கண்டி வரலாற்று சிறப்புமிக்க எசல பெரஹரா சிறந்த முறையில் நிறைவடைந்ததன் மூலம் நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

 

பெரஹரா நிறைவடைந்ததன் பின்னர் இராணுவத் தளபதி கண்டியில் ஊடகவியலாளர் சந்திப்பை மேற்கொண்டார். இதன் போது கருத்து வெளியிட்ட அவர், நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக குறிப்பிட்டார்.

 

பெருமளவு மக்கள் பெரஹராவைப் பார்த்து ரசித்தார்கள். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்திருந்தார்கள். இதன் மூலம், நாட்டில் மீண்டும் அமைதி நிலைநாட்டப்பட்டிருப்பது தெளிவாகிறது. முப்படையினர் மீதும், பொலிசார் மீதும் நாட்டு மக்கள் வைத்திருக்க நம்பிக்கை குறித்து நாம் மகிழ்ச்சி அடைகிறோம். எதிர்காலத்திலும் பாதுகாப்பை உறுதிப்படுத்த நாம் அர்ப்பணிப்புடன் பாடுபடுவோம் என இராணுவ தளபதி குறிப்பிட்டார்.

 

பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பொலிஸ் அத்தியட்சகருமான றுவன் குணசேகரவும், நாட்டின் தற்போதைய பாதுகாப்புத் தொடர்பில் கருத்துக்களை வெளியிட்டார்.

 

கண்டி எசல பெரஹராவை சிறப்பாக நடத்தி முடித்துள்ளோம். ஐந்து கும்பல் பெரஹராக்களையும், ஐந்து ரந்தோலி பெரஹராக்களையும் வெற்றிகரமாக நடத்தக் கூடியதாக இருந்தது. மத்திய மாகாணத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபரின் வழிகாட்டலில் பாதுகாப்புத் திட்டங்க்ள அமுலாகின. அதற்கு முப்படையினரின் ஒத்துழைப்பு கிடைத்தது. தேசிய பாதுகாப்பு சிறப்பாக இருப்பதை எடுத்துக் காட்டக்கூடிய சிறந்த உதாரணமாக எசல வைபவம் பூர்த்தியான விதமாகும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11