நிதி மோசடி குற்றச்சாட்டின் பேரில் இந்தியாவின் முன்னாள் நிதி அமைச்சர் கைது.
இந்தியாவின் முன்னாள் நிதி அமைச்சர் பி சிதம்பரம் ஊழல் மற்றும் நிதி மோசடி குற்றச்சாட்டுக்களின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். லஞ்சம் பெற்றுக் கொண்டு வெளிநாட்டு முதலீடுகளுக்கு உதவியதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இவர் விசாரிக்கப்படுகின்றார். எனினும், இந்தக் குற்றச்சாட்டுக்களை பி.சிதம்பரம் மறுத்துள்ளார். நேற்று மாலை இந்திய மத்திய புலனாய்வுப் பணியகத்தினால் இவர் கைது செய்யப்பட்டார். வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது ஆதரவாளர்களும், ஊடகங்களும் குழுமியிருந்த நிலையில் இவர் கைது செய்யப்பட்டதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. தலைநகர் டெல்லியில் உள்ள அவரது வீட்டிற்கு விசாரணை நடத்துவதற்காக அதிகாரிகள் வந்தபோது, அவர் வீட்டில் இல்லை என தெரிவிக்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.