ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை உள்ளிட்ட ஆறு குற்றச்செயல்களின் விசாரணை முன்னேற்ற அறிக்கை சட்ட மா அதிபரிடம் கையளிப்பு

Share Button

சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை உள்ளிட்ட ஆறு குற்றச்செயல்கள் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்ற அறிக்கை சட்ட மா அதிபர் தப்புல்ல டி லிவேராவுக்கு பதில் பொலிஸ் மா அதிபர் சி டீ விக்ரமரட்ன நேற்று அனுப்பி வைத்துள்ளார்.

சட்ட மா அதிபர் கடந்த 15ஆம் திகதி விடுத்த வேண்டுகோளுக்கு அமைய இந்த விசாரணை முன்னேற்ற அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

ரகர் வீரர் வஸிம் தாஜூடினின் படுகொலை, 17 நிவாரண பணியாளரகளின் படுகொலை, ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போனமை, ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்திச் செல்லப்பட்டமை, 11 இளைஞர்கள் கடத்திச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை ஆகிய குற்றச்செயல்கள் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றங்கள் குறித்து சட்ட மா அதிபருக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

குற்ற புலனாய்வு திணைக்களம் இந்த குற்றச்செயல்கள் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *