நிலையான அபிவிருத்தி மற்றும் நிர்மாணத் துறையின் அவசியம் குறித்;து ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

Share Button

நிலையான அபிவிருத்தி மற்றும் இணைந்த நிர்மாணத் துறையின் அவசியம் தற்போது அதிகம் காணப்படுவதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பெருநகர அபிவிருத்தி மற்றும் பாரிய அளவிலான அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மேற்கொள்ளும் போது, சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பில் அதிக அவதான நிலை ஏற்பட்டிருப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற தேசிய கட்டட நிர்மாணத்துறை கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

 

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *