அதிகளவிலான அபிவிருத்தித் திட்டங்களை கிராம மட்டத்திற்குக் கொண்டு சென்றது தற்போதைய அரசாங்கமே என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share Button
நாட்டை நிர்வகித்த முன்னைய அரசாங்கங்களை விட தற்போதைய அரசாங்கமே அதிகளவிலான அபிவிருத்திகளை கிராம மட்டத்திற்குக் கொண்டு சென்றிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதாணகே இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சுபாரதி நிகழ்ச்சியில் இன்று கலந்து கொண்ட அவர் இதனைக் குறிப்பிட்டார்.
ஜனநாயகத்தை உயர்ந்தபட்சமாக பாதுகாத்து, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் வேட்பாளர் ஒருவர் தெரிவு செய்யப்படுவார் எனவும் அவர் குறிப்பிட்டார்.
Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *