நாட்டிற்காக ஒன்றிணைவோம் தேசிய வேலைத்திட்டத்தின் ஏழாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகியுள்ளது. 

Share Button
நாட்டுக்காக ஒன்றிணைவோம்’ நிகழ்ச்சித்திட்டத்தின் ஏழாவது நிகழ்ச்சித்திட்டம் இன்று யாழ்ப்பாண மாவட்டத்தை மையப்படுத்தி ஆரம்பமாகிறது.
ஜனாதிபதியின் வழிகாட்டலில் ஜனாதிபதி அலுவலகத்தினால் பொதுமக்கள் நலன்பேணலுக்காக இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
அமைச்சுக்களின் மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களின் பெறுபேறுகளை வினைத்திறனாக மக்களுக்கு பெற்றுக்கொடுக்கவும் இதுவரையில் தீர்வு கிடைக்கப்பெறாத மக்களின் நீண்டகால பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் நோக்கத்துடனும் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
ஜனாதிபதி அலுவலகம், அமைச்சுக்கள், மாகாண சபைகள் மற்றும் தனியார் துறையுடன் இணைந்து நடைமுறைப்படுத்தப்படும் நிகழ்ச்சித்திட்டங்கள் இன்று முதல் எதிர்வரும் 29ஆம் திகதி வரையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் அனைத்து பிரதேச செயலக பிரிவுகளையும் உள்ளடக்கிய வகையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இதன் முன்னேற்ற மீளாய்வும் இறுதி நிகழ்வும் ஆகஸ்ட் மாதம் 30ஆம் திகதி ஜனாதிபதியின் தலைமையில் இடம்பெறும்.
Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *