யாழ்ப்பாண மக்களுக்கு குடிநீரை வழங்கும் வேலைத்திட்டம்

Share Button

நாட்டுக்காக ஒன்றிணைவோம்தேசிய தொடர் திட்டத்தின் 7வது கட்டம் யாழ்ப்பாணத்தில் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைத்திட்டத்திற்கு அமைய ஜனாதிபதி செயலகம், யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் 15 பிரதேச செயலகங்களில் சிறுநீரக நோய்த் தடுப்பு நிவாரணம் தொடர்பாக பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் என்.வேதநாயகன் தெரிவித்துள்ளார். மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்குவதில் நீண்டகாலமாக யாழ்ப்பாண மாவட்ட எதிர்கொண்ட முக்கிய சமூகப் பிரச்சனையாக அமைந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார். இதன் பெறுபேறாக வடமாகாணத்தில் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதற்கமைய, யாழ்ப்பாண மாவட்டத்தில் 435 கிராம உத்தியோகத்தர் பிரிவில் இந்த வாரம் முழுவதும் பொதுமக்களுக்கு தெளிவுபடுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. எதிர்வரும் 30ம் திகதி வரை யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நாட்டுக்காக ஒன்றிணைவோம் தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ குடிநீரை சுத்தம்  செய்யும் இயந்திரங்களும் விநியோகிக்கப்பட உள்ளன. இதுவரை இவ்வாறான 55 நீர் கட்டமைப்புக்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நாளாந்தம் 1 இலட்சத்து 72 ஆயிரம் லீற்றர் நீர் சுத்திகரிக்கப்படுவதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஒரு இலட்சத்து 30 ஆயிரம் பேர் நன்மையடைகின்றனர்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *