அவசரகாலச் சட்டம் மேலும் நீடிக்கப்படாமை விசாரணைகளுக்கு எந்தவித தடையும் ஏற்படாது என்று பொலிசார் தெரிவிப்பு

Share Button

தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள 200 நபர்கள்  அவசரகாலச்சட்டம் நீக்கப்பட்டதுடன் விடுவிக்கப்படுவார்கள் என்று வெளியான செய்தி குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கருத்து வெளியிடுகையில், அந்தக் கூற்றை முற்றாக நிராகரிப்பதாக தெரிவித்தார்.

 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில், கைது செய்யப்பட்ட அனைத்து சந்தேக நபர்களும் தடுத்து வைக்கப்பட்டமை அவசரகாலச் சட்டத்தின் கீழ் அல்ல என்றும் பயங்கரவாதத்தைத் தடுக்கும் தற்காலிக ஒழுங்கு விதிச் சட்டத்தில் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

அவசரகாலச் சட்டம் நீடிக்கப்படாமையினால் நாட்டின் பாதுகாப்பிற்கு பாதிப்பு ஏற்படாது என்று இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடிர் சுமித் அத்தப்பத்து தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக எமது நிலையத்திற்கு கருத்து வெளியிட்ட அவர், பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் 12வது ஷரத்தில் ஜனாதிபதிக்கு வழங்கபப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைவாக, பொலிசாருக்கு ஒத்துழைப்பு வழங்கல் மற்றும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக இராணுவம் அழைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *