நாடு முழுவதிலும் மக்கள் மத்தியில் அமைதியை முன்னெடுப்பதற்காக ஜனாதிபதி முப்படையினருக்கும் அழைப்பு

Share Button

நாடு தழுவிய ரீதியில் பொதுமக்களின் அமைதி கருதி, பாதுகாப்புப் படையினரை ஈடுபடுத்தவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின், 12வது ஷரத்திற்கு அமைவாக உள்ள அதிகாரத்திற்கு உட்பட்ட வகையில், இந்த உத்தரவு வெளியிடப்பட்டுள்ளதாக அதி விசேட வர்த்தமானி அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த வர்த்தமானி அறிவிப்பு குறித்த விடயங்கள் நேற்று முன்தினம் முதல் அமுலுக்கு வந்துள்ளன. இதற்கமைய இலங்கை இராணுவம், கடற்படை, விமானப்படை, நாட்டின் அனைத்து நிர்வாக மாவட்டங்களில், அந்தந்த மாவட்டங்களின் தேசிய மக்களின் அமைதி நிலை கருதி முன்னெடுக்க அழைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *