தற்போது அனுபவிக்கும் சுதந்திரத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பதா என்பது தொடர்பிலான தீர்மானம் பொதுமக்களை சார்ந்ததாகும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்

Share Button

தற்போது நாம் அனுபவிக்கும் சுதந்திரத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பதா என்பது தொடர்பான தீர்மானம் பொதுமக்களை சார்ந்ததாகும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். முன்பிருந்த அரசாங்கம் பொதுமக்களின் சுதந்திரத்தை வரையறுத்திருந்ததாகவும் அவர் கூறினார். போகம்பர சிறைச்சாலை வளவில் கலாசார பூங்காவை திறந்து வைக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

 

இதில் பிரதமர் உரையாற்றினார். சமகால அரசாங்கம் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்டது. உயிர்த்த ஞாயிறு அன்று மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதல்களினால் வீழ்ச்சி கண்ட பொருளாதாரம் மீண்டும் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. சுற்றுலா தொழில்துறை படிப்படியாக வழமை நிலைமைக்கு திரும்பி வருவதாகவும் பிரதமர் கூறினார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *