அவசரகால சட்டம் நீக்கப்பட்டதை தொடர்ந்து, பயங்கரவாத அமைப்புக்கள் மீதான தடை நீக்கப்படாதென பாதுகாப்பு அமைச்சு தெரிவிப்பு

Share Button

அவசரகால சட்டம் நீடிக்கப்படாமை, பயங்கரவாத அமைப்புக்களின் தடைக்கு இடையூறு ஏற்படுத்தாதென பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. தேசிய தௌஹீத் ஜமாத்தே மிலாத்தே இப்ராஹிம் மற்றும் விலயான் அல் செயிலானி போன்ற மூன்று அமைப்புக்கள் தடை செய்யப்பட்டுள்ளமை அவசரகால சட்டத்தின் கீழ் அல்ல என்றும், இவை 1979ஆம் ஆண்டு இலக்கம் 48இன் கீழான பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் 27ஆவது சரத்தின் கீழாகும் என்று பாதுகாப்பு அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டு சுட்டிக்காட்டியுள்ளது.

 

இதற்கு அமைவாக அவசரகால சட்டம் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த மூன்று அமைப்புக்கள் மீதான தடை நீங்குவதாக பரப்பப்படும் வதந்தி அடிப்படை அற்றதாகும் என்றும் பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *