இலங்கை – நியுசிலாந்து அணிகளுக்கு இ டையிலான இரண்டாவதும் இறுதியுமான ரெஸ்ட் போட்டியின் ஐந்தாம் நாள் ஆட்டம் இன்று.

Share Button

இலங்கை – நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவதும் இறுதியுமான ரெஸ்ட் போட்டியின் ஐந்தாம் நாள் ஆட்டம் இன்று கொழும்பு பி.சரவணமுத்து மைதானத்தில் இடம்பெறும். கடந்த 4 நாட்களாக இடம்பெற்ற இந்தப் போட்டி மழை காரணமாக, பெரிதும் பாதிக்கப்பட்டது. இரு அணிகளும் தமது முதலாவது இனிங்சை பூர்த்தி செய்ய முடியாத நிலையில் இன்று போட்டி தொடர்கிறது. நியுசிலாந்து நேற்றைய நாள் ஆட்டமுடிவின் போது தனது முதலாவது இனிங்சில் 5 விக்கெட் இழப்பிற்கு 382 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. முன்னதாக இலங்கை அணி தனது முதலாவது இனிங்சில் 244 ஓட்டங்களைப் பெற்றது. இன்றைய நாள் ஆட்டமும் சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்படலாம் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது. எனவே, இந்தப் போட்டி பெரும்பாலும் வெற்றி தோல்வியின்றி நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-28 | 19:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,807
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 500
புதிய நோயாளிகள் - 02
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 65
நோயிலிருந்து தேறியோர் - 2,296
இறப்புக்கள் - 11