இளைஞர் சமூகத்திற்கான ஸ்மாட் ஸ்ரீலங்கா மத்திய நிலையம் யாழ்ப்பாண மாவட்டத்தில்

Share Button

யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படும் ‘நாட்டுக்காக ஒன்றிணைவோம்’ எனும் தொனிப்பொருளிலான தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் இன்றைய நான்காவது நாளுடன் ஆயிரத்து 711 வேலைத்திட்டங்கள் தற்போது பூர்த்தியடைந்திருப்பதாக மாவட்ட செயலாளர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் எண்ணக்கருவில் உருவான ‘நாட்டுக்காக ஒன்றிணைவோம்’ வேலைத்திட்டத்தின் ஏழாவது நிகழ்ச்சித் திட்டம் யாழ்ப்பாண மாவட்டத்தில்; மாவட்டச் செயலாளர் தலைமையில் இடம்பெறுகின்றது. ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி விசேட செயலணியுடன் இணைந்து யாழ்ப்பாண மாவட்டச் செயலகம் ஊடாக இந்த திட்டத்தை முன்னெடுக்கின்றது. இதற்கு சமாந்தரமாக ஜனாதிபதி செயலகத்தில் நேரடிக் கண்காணிப்பின் கீழ் செயற்படும் ஸ்மாட் ஸ்ரீலங்கா வேலைத்திட்டமும் யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்சமயம் முன்னெடுக்கப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் நேற்று முன்னெடுக்கப்பட்ட ‘நாட்டுக்காக ஒன்றிணைவோம்’ அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் சுமார் 420 திட்டங்கள் பூர்த்தியடைந்துள்ளன. நேற்று முன்தினம் வரையிலான இரு தினங்களிலும் ஆயிரத்து 291 திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. கிராம-சக்தி, சுற்றாடல் பாதுகாப்பு, உற்பத்தித்திறன், ஸ்மாட் ஸ்ரீலங்கா, ஜனாதிபதியிடம் தெரிவியுங்கள், சிறுநீரக பாதிப்பிலிருந்து விடுபடுதல், பிள்ளைகளை பாதுகாப்போம், உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் நேற்றும் முன்னெடுக்கப்பட்டன. யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படும் ‘நாட்டுக்காக ஒன்றிணைவோம்’ தேசிய வேலைத்திட்டம் எதிர்வரும் 30ம் திகதி வரையில் 15 பிரதேச செயலக பிரிவுகளிலுள்ள 435 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் இடம்பெறும்.இந்த வேலைத்திட்டத்தின் கீழ் யாழ்ப்பாண மாவட்டத்தில் நான்காயிரத்து 400 நிகழ்ச்சித் திட்டங்கள் அமுல்படுத்தப்படவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11