12 years later Sri Lanka team capturing series against South Africa

Share Button

சுற்றுலா தென்னாபிரிக்க அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையில் இடம்பெற்ற இரண்டாவது ரெஸ்ட் கிரிக்கட் போட்டியில் இலங்கை அணி 199 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.

இதன் மூலம் இலங்கை அணி இரண்டுக்கு பூஜியம் என்ற வித்தியாசத்தில் சுற்றுத்தொடரை தனதாக்கிக் கொண்டது.

இலங்கை தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டாவது ரெஸ்;ட் கிரிக்கட் போட்டியின் ஆட்ட நாயகனாக திமுத் கருணாரத்ன தெரிவு செய்யப்பட்டுள்ளார். சுற்றுத்தொடரின் தொடர் ஆட்டநாயகனாகவும் அவர் தெரிவானார்.

இலங்கை அணி 12 வருடங்களின் பின்னர் தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஒன்றில் வெற்றி பெற்ற முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

இதேவேளை இரு அணிகளுக்கும் இடையிலான ஐந்து போட்டிகளை கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர்; எதிர்வரும் 29 ஆம் திகதி தம்புள்ளையில் ஆரம்பமாகவுள்ளது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *