நாட்டின் தென்மேற்குப் பிரதேசத்தில் இன்று தொடக்கம் மழையுடன் கூடிய காலநிலை அதிகரிக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது

Share Button

ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் ஊடாக கல்முனை வரையிலான கடற் பிரதேசத்திலும், புத்தளத்திலிருந்து மன்னார் காங்கேசந்துறை ஊடாக திருகோணமலை வரையிலான கடற்பகுதியிலும் காற்றின் வேகம் மணிக்கு 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. கடற் பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழையின் போது, காற்றின் வேகம் தற்காலிகமாக மணிக்கு 70 கிலோமீற்றர் தொடக்கம் 80 கிலோமீற்றர் வரை அதிகரிக்கலாம். கடற்றொழிலில் ஈடுபட்டுள்ளவர்களும், கப்பல் போக்குவரத்தை மேற்கொள்பவர்களும் இதுபற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்திருக்கின்றது.

இதேவேளை, நாட்டின் தென்மேற்குப் பிரதேசத்தில் இன்று தொடக்கம் மழையுடன் கூடிய காலநிலை அதிகரிக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்திருக்கிறது. மேற்கு, மத்திய, சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம். ஊவா மாகாணத்திலும், அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும் இன்று பிற்பகல் 2 மணியின் பின்னர் மழை பெய்யலாம் என்று வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11