பிணைமுறி மோசடி தொடர்பிலான விசாரணை நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி உரிய தரப்புக்கு ஆலோசனை

Share Button

பிணை முறி குற்றச்சாட்டுத் தொடர்பிலான விசாரணை நடவடிக்கைகளை விரைவு படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரிய பகுதிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். விசாரணை நடவடிக்கைகள் காலதாமதப்படுத்துவது, நியாயத்தை நிலைநாட்டுவது பிரதான இடையூறாக அமைந்துள்ளதாக அவர் கூறினார். பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழு உறுப்பினர்கள் உட்பட அதிகாரிகளுடனான சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதன்போதே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார். இதுவரையில் பிணைமுறி விவகாரம் தொடர்பில் நான்கு அறிக்கைகள் கிடைத்துள்ளன. டிசம்பர் மாதம் அளவில் ஏனைய அறிக்கைக்கைகளை முன்வைக்க முடியுமென இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது. பிணைமுறி மோசடியுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு தண்டனை சட்டக்கோவையின் கீழ் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டதாக சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதிநிதிகள் இந்த பேச்சுவார்த்தையின்போது தெரிவித்தனர்.

இதேவேளை இவ்விவகாரம் தொடர்பாக விசாரணை நடவடிக்கை விரைவுபடுத்துவதற்கு தன்னால் வழங்கப்பட வேண்டிய சகல ஒத்துழைப்பையும் வழங்குவதாக ஜனாதிபதி தெரிவித்தார். நிதியமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்.எஸ்.எஸ். சமரதுங்க, மத்திய வங்கியின் ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமி, பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி விக்ரமரத்ன உட்பட சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகளும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11