அமெரிக்காவின் கிழக்குப் பகுதிக்கு டொரியன் சூறாவளியினால் பாதிப்பு.

Share Button

அமெரிக்காவின் கிழக்குப் பகுதியில் டொரியன் சூறாவளி வீசிவருகின்றது. எனினும், பீற்றோ ரிக்கோ தீவு இதிலிருந்து தப்பியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வீக்கஸ் மற்றும் குலெட்ரா ஆகிய சிறிய தீவுகளில் கடும் புயலுடன் மழை பெய்து வருகிறது. எவ்வாறாயினும். இரண்டு வருடங்களுக்கு முன்னர் பீற்றோ ரிக்கோ தீவை தாக்கிய சூறாவளியையும் விட டொரியன் சூறாவளி சக்தி குறைந்ததாகும் என கூறப்படுகிறது. இருந்த போதிலும், எதிர்வரும் தினங்களில் இந்த சூறாவளி வலுவடைந்து, புளோரிடா, ஜோர்ஜியா ஆகிய மாநிலங்களை அடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புளோரிடாவில் நேற்றைய தினம் அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *