யாழில் முன்னெடுக்கப்பட்டு வரும் நாட்டிற்காக ஒன்றிணைவோம் தேசிய அபிவிருத்தி திட்டத்தின் இறுதி நாள் நிகழ்வுகள் இன்று ஜனாதிபதி தலைமையில்

Share Button

யாழில் முன்னெடுக்கப்பட்டு வரும் நாட்டிற்காக ஒன்றிணைவோம் தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் இறுதி நாள் நிகழ்வுகள் இன்று ஜனாதிபதி மைத்திரிபால ஸ்ரீசேனவின் தலைமையில் இடம்பெறும் என மாவட்டச் செயலாளர் என்.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி சுமார் 24 மில்லியன் ரூபாய் செலவில் நிரிமாணிக்கப்பட்டிருக்கும் இளைஞர்களுக்கான தொழில் வழிகாட்டல் நிலையமான ஸ்மார்ட் ஸ்ரீலங்கா அலுவலகத்தை திறந்து வைப்பார்.

அதேவேளை, பருத்தித்துறை மீனவர் துறைமுகத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும், சுத்தமான குடிநீர் சேகரிப்புத் திட்டங்களும் இன்றைய தினம் ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன.

யாழ். மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நீர் சுத்திகரிப்பு உபகரணங்களையும் ஜனாதிபதி வழங்கி வைப்பார்.

பல்வேறு வாழ்வாதார அபிவிருத்தி வேலைத் திட்டங்களையும் ஜனாதிபதி மக்களிடம் கையளிக்கவுள்ளதாக யாழ். மாவட்டச் செயலாளர் என்.வேதநாயகன் எமது நிலையத்திற்குத் தெரிவித்தார்.

 

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jun-05 | 17:06

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 1,800
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 931
புதிய நோயாளிகள் - 03
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 48
நோயிலிருந்து தேறியோர் - 858
இறப்புக்கள் - 11