மழைநீரை சேகரித்து முன்னெடுக்கப்படும் பாரிய குடிநீர் வேலைத்திட்டம் ஜனாதிபதி தலைமையில் யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்

Share Button

மழை நீரை சேகரித்து முன்னெடுக்கப்படும் பாரிய குடிநீர் வேலைத்திட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று யாழப்பாணம் வடமராட்சி பிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட்டது. யாழ் மக்கள் நீண்டகாலம் எதிர்கொண்டுள்ள குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வழங்கும் வகையில் ஜனாதிபதயின் தலையீட்டில் இரண்டு பில்லியன் ரூபா செலவில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இரண்டு வருட காலப்பகுதியில் இத்திட்டத்தை பூர்த்தி செய்வதற்கு நீர்வழங்கல் வடிகாலமைப்பு திணைக்களம் எதிர்பார்த்துள்ளது.

இதேவேளை யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் இன்று ஆரம்பமான வடக்கு நீர் விநியோக மாநாட்டிலும் ஜனாதிபதி கலந்து கொண்டார். வடமாகாணத்தில் நிலையான நீர் முகாமைத்துவம் தொடர்பில் இந்த மாநாட்டில் கவனம் செலுத்தப்பட்டது. இந்த மாநாடு நாளையும் இடம்பெறவுள்ளது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Mar-31 | 16:03

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 129
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 111
புதிய நோயாளிகள் - 7
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 173
நோயிலிருந்து தேறியோர் - 16
இறப்புக்கள் - 2