எல்பிட்டி பிரதேச சபைத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

Share Button

எல்பிட்டி பிரதேச சபைத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உயர்நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த உள்ளுராட்சிசபை தேர்தலின்போது அந்த பிரதேச சபைக்காக ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி முன்வைத்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக அந்தக் கட்சியினால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையின்போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உயர்நீதிமன்றத்தின் மூவர் அடங்கிய நீதிபதிகள் குழாம் எல்பிட்டி பிரதேச சபைத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *