ஜேர்மன் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கும்;, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் சந்திப்பு

Share Button

ஜேர்மனுக்கும் இலங்கைக்கும் இடையிலான பொருளாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. இலங்கை வந்துள்ள ஜேர்மன் பாராளுமன்ற செயலாளர் நாயகமும், அந்நாட்டு டிஜிடெல் உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பான பிரதியமைச்சருமான ஸ்டெபன் பில்கர், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை நேற்று அலரிமாளிகையில் சந்தித்தார். இதன்போது இரு தரப்பு பொருளாதாரம் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. போக்குவரத்து, விமானசேவைகளை ஜேர்மனியிடம் இருந்து பெற்றக் கொள்வது தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டது. இலங்கை இந்து சமுத்திரத்தின் கேந்திர நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கான வழி வகைகளுக்கான திட்டம் தொடர்பில் பிரதமர் இதன்போது தெளிவுபடுத்தினார். ஒவ்வொரு கட்டமாக அந்த இலக்கi வெற்றி கொள்வதற்கு முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளை ஸ்டெபன் பில்கர் பாராட்டியுள்ளார். அதற்கு ஜேர்மன் தமது பூரண ஒத்துழைப்பை வழங்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *