இலங்கையின் முதலாவது தொழில்நுட்ப கல்வியியல் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று பிரதமர் தலைமையில் நடைபெறும்

Share Button

இலங்கையின் கல்வித்துறையில் புரட்சிகர அபிவிருத்தி பயணத்தின் மற்றுமொரு கட்டமாக இலங்கையின் முதலாவது தொழில்நுட்ப கல்வியியல் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு குளியாப்பிட்டியில் இன்று இடம்பெறவுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொள்வார்.

பாடசாலை கட்டமைப்பில் தொழில்நுட்ப பாடங்களை கற்பிப்பதற்கு பயிற்றப்பட்ட ஆசிரியர்களை உருவாக்குவது இதன்நோக்கமாகும். குளியாப்பிட்டி நாரங்கல பிரதேசத்தில் 16 ஏக்கர் விஸ்தீரணமான காணி இதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கையின் தேசிய கல்வியியல் கல்லூரி வரலாற்றில் இணைந்து கொள்ளும் 20ஆவது கல்லூரி இதுவாகும். கொரிய அரசாங்கம் இதற்கென இரண்டாயிரத்து 500 மில்லியன் ரூபாவை வழங்குவதோடு இலங்கை அரசாங்கமும் இதற்கென 500 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது. 2022ம் ஆண்டளவில் தொழில்நுட்ப கல்வியியல் கல்லூரி திறக்கப்படவுள்ளது.

இதறக்கமைவாக குளியாப்பிட்டிய பிரதேசத்தில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் இன்று ஆரம்பிக்கப்படுகின்றன. வயம்ப பல்கலைக்கழகத்தின் புதிய மருத்துவபீடம் இன்று திறக்கப்படவுள்ளது. குளியாப்பிட்டிய போவத்த வீதி கார்பட் இட்டு அபிவிருத்தி செய்யப்படுகிறது. குளியாப்பிட்டிய நகரின் பொது வர்த்தக நிலையம், நூல் நிலையம் என்பனவற்றுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும் இன்று இடம்பெறவுள்ளன. குளியாப்பிட்டிய சுரங்க பாதையும் பிரதமரினால் இன்று திறந்து வைக்கப்படவுள்ளது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *