நாட்டின் முதலாவது தொழில்நுட்ப கல்வியல் கல்லூரியின் நிர்மாணப் பணிகள் பிரதமர் தலைமையில் ஆரம்பம்.

Share Button

நாட்டில் தொழில்நுட்ப கல்வியை வலுப்படுத்துவதற்காக தொழில் செயற்றினைக் கொண்ட ஆசிரியர் சமூகம் ஒன்று பாடசாலை கட்டமைப்புக்கு பங்களிப்பு செய்யும் நோக்கில் முதலாவது தொழில்நுட்ப கல்வியல் கல்லூரியை நிர்மாணிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கல்வித்துறையில் புரட்;சி அபிவிருத்தியை முன்னெடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள், குளியாப்பிட்டி நாரங்கொல்ல என்ற இடத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இந்த தொழில்நுட்க கல்வியல் கல்லூரிக்கான நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

 

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க கல்வியில் நவீன மய நடவடிககையும், பொருளாதாரத்தில் நவீன மயத்தையும் முன்னெடுக்கும் நடவடிக்கையாக நாட்டில் முதலாவது தொழில்நுட்ப கல்வியில் கல்லூரி நிர்மாணிக்கப்படுவதாக தெரிவித்தார். தரம் 13க்கு உட்பட்ட பாடசாலைக் கல்வியை உறுதி செய்யும் அரசாங்கத்தின் வேலைத் திட்டத்தின் கீழ் இறுதி இரண்டு ஆண்டுகளில் தொழில்நுட்பத் துறையில் கல்வியைத் தொடரும் மாணவர்களுக்கு தேவையான ஆசிரியர்கள் இதன் மூலம் உருவாக்கப்படுவார்கள். ஜப்பான், கொரியா போன்ற நாடுகளைப் போன்று நாட்டிலும், பயிற்சி முறை செயலணி ஒன்றை ஏற்படுத்தும் நோக்கில் மாணவர்களுக்கு தொழில் பயிற்சியை பெற்றுக்கொடுக்க தேவையான வசதிகளை அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. கொரிய நாட்டின் நிதி உதவியின் கீழ் நாட்டில் பாரிய தொழில் பயிற்சி நிலையம் ஒறுகொடவத்தையில் சமீபத்தில் திறந்து வைக்கப்படதாகவும் பிரதமர் கூறினார். நாட்டின் பல்கலைக்கழக துறையில் மற்றுமொரு வைத்தியபீடம் வயம்ப பல்கலைக்கழகத்தில் திறக்கப்பட்டது. மூன்றாவது பல்கலைக்கழகம் விரைவில் மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் ஆரம்பிக்கப்பட இருப்பதாகவும் பிரதமர் கூறினார்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் உரையாற்றுகையில் இந்த தொழில்நுட்ப கல்வியல் கல்லூரியிpல் நான்கு வருடப் பயிற்சியை பூர்த்தி செய்த ஆசிரியர்களுக்கு பட்டம் வழங்கப்படும். கொரியாவின் கொய்க்கா நிறுவனம் இதற்காக இரண்டாயிரத்து 500 மில்லியன் ரூபா நிதியை வழங்கியுள்ளது. கல்வி அமைச்சு இதற்காக 500 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *