கடந்த இரண்டு தினங்களில் காலி மாவட்டத்தில் பெய்த மழை மற்றும் காற்றின் காரணமாக நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிப்பு

Share Button

கடந்த இரண்டு தினங்களில் காலி மாவட்டத்தில் பெய்த கடும் மழை மற்றும் காற்றின் காரணமாக 123 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் காலி மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் லெக்டினன்ட் கேர்ணல் தம்பத் ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.

பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட ஒன்பது கிராம உத்தியோகத்தர் பிரிவுகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர். காற்றின் காரணமாக மரம் முறிந்து வீழ்ந்ததனால், ஒரு வீடு முற்றாக சேதமடைந்தது. ஓரளவு சேதமடைந்த வீடுகளின் எண்ணிக்கை 33 ஆகும். நிவாரண நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டிருப்பதாக பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *