எதிர்வரும் பத்து ஆண்டுக் காலப்பகுதியில் முழுமையாக பயிற்றுவிக்கப்பட்ட ஆட்பலத்தை கொண்ட நாடாக இலங்கை விளங்கும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்

Share Button

பயிற்சியாளர்களைக் கொண்ட செயலணியொன்றை ஏற்படுத்தும் நோக்கில் பாடசாலை மாணவர்களுக்கு தொழிற்பயிற்சியை பெற்றுக் கொள்வதற்கான வசதியை அரசாங்கம் மேம்படுத்தியிருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இதற்கு அமைவாக, கொரிய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ், நாட்டில் பாரிய தொழில்பயிற்சி மத்திய நிலையம் ஒருகொடத்தையில் சமீபத்தில் திறக்கப்பட்டுள்ளது. குளியாபிட்டிய நாரங்கொல்ல என்ற இடத்தில் அமைக்கப்படும் நாட்டின் முதலாவது தொழில்நுட்ப கல்வியியல் கல்லூரியின் நிர்மாணப் பணிகள் ஆரம்பமாவதை முன்னிட்டு, இன்று காலை நடைபெற்ற வைபவத்தில் கலந்து கொண்ட பிரதமர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.

கல்வி நவீனமயப்படுத்தல், பொருளாதாரத்தை நவீனமயப்படுத்தல் ஆகியவற்றின் முன்னோடி நடவடிக்கையாக இந்த தொழில்நுட்ப கல்வியியல் கல்லூரி நிர்மாணிக்கப்படுவதாக பிரதமர் தெரிவித்தார்.

தரம் 13க்கு உட்பட்ட பாடசாலைக் கல்வியை உறுதி செய்யும் அரசாங்கத்தின் வேலைத் திட்டத்தின் கீழ் இறுதி இரண்டு ஆண்டுகளில் தொழில்நுட்பத் துறையில் கல்வியைத் தொடரும் மாணவர்களுக்கு தேவையான ஆசிரியர்கள் இதன் மூலம் உருவாக்கப்படுவார்கள். ஜப்பான், கொரியா போன்ற நாடுகளைப் போன்று நாட்டிலும், பயிற்சி முறை செயலணி ஒன்றை ஏற்படுத்தும் நோக்கில் மாணவர்களுக்கு தொழில் பயிற்சியை பெற்றுக்கொடுக்க தேவையான வசதிகளை அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. கொரிய நாட்டின் நிதி உதவியின் கீழ் நாட்டில் பாரிய தொழில் பயிற்சி நிலையம் ஒறுகொடவத்தையில் சமீபத்தில் திறந்து வைக்கப்படதாகவும் பிரதமர் கூறினார். நாட்டின் பல்கலைக்கழக துறையில் மற்றுமொரு வைத்தியபீடம் வயம்ப பல்கலைக்கழகத்தில் திறக்கப்பட்டது. மூன்றாவது பல்கலைக்கழகம் விரைவில் மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் ஆரம்பிக்கப்பட இருப்பதாகவும் பிரதமர் கூறினார்.

கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் இங்கு உரையாற்றுகையில், கல்விக்காக பாரிய முதலீடு மேற்கொள்ளப்படுகிறது. சமீப காலத்தில் கல்வி கட்டமைப்புக்குள் 13 வருட தொடர்ச்சியான கல்வி வேலைத்திட்டம், அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை, சுரக்ஷா காப்புறுதி ஆகியன நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இம்முறை கல்வியியல் கல்லூரிக்கு எட்டாயிரம் மாணவர்கள் ஒரே முறையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் தெரிவித்தார். அரசாங்கம் இணைத்துக் கொள்ளப்படும் 16 ஆயிரம் பட்டதாரிகளில் ஐயாயிரம் பேர் ஆசிரியர்களாக கல்விக் கட்டமைப்புக்குக்குள் உள்வாங்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார். இதனால், ஆசிரியர் பற்றாக்குறை முழுமையாக நீக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *