குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக சில தொழிற்சங்கங்கள் பாடசாலை கட்டமைப்பை சீர்குலைக்க முயன்று வருவதை கல்வி அமைச்சர் நிராகரித்துள்ளார்
குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக சில தொழிற்சங்கங்கள் பாடசாலை கட்டமைப்பை சீர்குலைக்க முயன்று வருவதை கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் நிராகரித்துள்ளார். அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டுமாயின் வேறு வழிமுறைகளை பின்பற்றுமாறு அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.
நியாயமற்ற கோரிக்கைகளை முன்வைத்து சில தொழிற்சங்கங்கள் பாடசாலை கட்டமைப்பை சீர்குலைக்க திட்டமிட்ட அடிப்படையில் செயற்படுகின்றன. பிள்ளைகளின் கல்வியை விளையாட்டாகக் கருத வேண்டாம் என்று அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் உரிய தொழிற்சங்கங்களை கேட்டுள்ளார்.