பயங்கரவாதத் தாக்குதல் மேற்கொள்ளப்படலாமென்று, 97 தடவைகள் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share Button

சஹரான் ஹாஸிம் தலைமையிலான பயங்கரவாதக் குழு தாக்குதல் நடத்தவுள்ளதாக கூறும் 97 எச்சரிக்கை அறிவித்தல்களை தேசிய புலனாய்வு சேவை கடந்த மூன்று ஆண்டுகளில் பாதுகாப்புச் செயலாளருக்கும், பொலிஸ்மா அதிபருக்கும் அனுப்பியுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்ஜய ஜயவர்தன நேற்று உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இந்த அறிவித்தல்கள் 2017ஆம், 2018ஆம் ஆண்டுகளில் சமர்ப்பிக்கப்பட்டவையாகும்.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதலை தடுக்கத் தவறினார்கள் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று இடம்பெற்றது. இதன் போது சட்டத்தரணி சஞ்ஜய ஜயவர்தன உயர்நீதிமன்றத்தில் இதுபற்றி அறிவித்தார்.

 

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *