பிரக்ஸிட் தொடர்பான முக்கிய வாக்கெடுப்பு – பிரித்தானியாவின் புதிய பிரதமர் தோல்வி

Share Button

பிரக்ஸிட் தொடர்பான முக்கிய வாக்கெடுப்பில், பிரித்தானியாவின் புதிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தோல்வியடைந்துள்ளார்.

பிரக்ஸிட் தொடர்பான குழப்பநிலைக்காரணமாக பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் தெரேசா மே பதவி விலகினார்.

அதனைத் தொடர்ந்து வெளிவிவகார அமைச்சராக இருந்த பொரிஸ் ஜோன்ஸன் புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட்டார்.

இந்தநிலையில் நேற்றைய தினம், ஒப்பந்தம் இன்றில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகும் யோசனையை அவர் சமர்ப்பித்தார்.

அதற்கு பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த 20 உறுப்பினர்களும் எதிராகவே வாக்களித்துள்ளனர்.

முன்னதாக, ஒப்பந்தம் இன்றில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகும் தமது யோசனை தோற்கடிக்கப்படும் பட்சத்தில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 14ஆம் திகதி தேர்தல் நடத்துவதற்கான யோசனை முன்வைக்கப்படும் என பிரித்தானிய பிரதமர் குறிப்பிட்டிருந்தார்.

இதனிடையே, பொரிஸ் ஜோன்சனின் கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பிலிப் லீ, லிபரல் டெமேக்கிரட்ஸ் கட்சியில் இணைந்துள்ளார். இதனால் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் பெருப்பான்மை பலத்தை இழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *