இலங்கை அணியுடனான ரீ-20 தொடரைக் கைப்பற்றியது – நியூசிலாந்து அணி.

Share Button

சுற்றுலா நியூசிலாந்து அணிக்கும் – இலங்கை அணிக்கும் இடையிலான ரீ-20 தொடரை நியூசிலாந்து அணி கைப்பற்றியுள்ளது.

கண்டி பல்லேகலையில் நேற்று இடம்பெற்ற இரண்டாவது ரீ-20 போட்டியில் 4 விக்கட்டுக்களால் வெற்றிப்பெற்றதன் மூலம் இரண்டுக்கு பூச்சியம் என்ற கணக்கில் நியூசிலாந்து அணி தொடரைக் கைப்பற்றியது.

நேற்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி, இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுக்களை இழந்து 161 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலளித்த நியூசிலாந்து அணி 19.4 ஓவர்களில் 6 விக்கட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

அதன்படி, ஒரு போட்டி எச்சியுள்ள நிலையில்; தொடர் இரண்டுக்கு பூச்சியம் என்ற கணக்கில் நியூசிலாந்து வசமானது.

இந்தநிலையில் இரண்டு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ரீ-20 போட்டி நாளை மறுதினம் இடம்பெறவுள்ளது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *