ஜனாதிபதியின் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக பிரதமர் கூறுகிறார்.

Share Button

நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு தொடர்ந்தும் தாம் செயற்படுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் 19வது திருத்தச் சட்டத்தின் மூலம், ஜனாதிபதிப் பதவிக்குரிய சில அதிகாரங்களைக் குறைக்க முடிந்துள்ளது. இதற்கு முன்னர் ஆட்சியில் இருந்த அரசாங்கம் அரசியலமைப்பை பாரிய வகையில் மீறியது. அதனால்,  19வது திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.

19வது திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்ட பின்னர், ஜனாதிபதிக்கு உரிய சில அதிகாரங்கள் வரையறுக்கப்பட்டதுடன், அது அமைச்சரவைக்கும், பாராளுமன்றத்திற்கும், பொறுப்பாக்கப்பட்டதாக பிரதமர் சுட்டிக்காட்டினார். மாலைதீவு பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது இதனைத் தெரிவித்தார்.

மாலைதீவுக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று காலை மாலைதீவு பாராளுமன்றத்தில் உரையாற்றுவதற்குச் சென்றார். பிரதமருக்கு மாலைதீவு சபாநாயகர் மொஹம்மத் நஷீட் அமோக வரவேற்பளித்தார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *