ஜனநாயக ரீதியான பரந்த அரசியல் முன்னணி உருவாக்கப்படும் என ஜனாதிபதி தெரிவிப்பு

Share Button

நாட்டில் பொதுமக்கள் சார் அரசியல் ஏற்படுத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார். நேர்மையான மக்களை நேசிக்கும் வேலைத்திட்டத்துடன் கூடிய தலைவர் நாட்டுக்குத் தேவை என்றும் அவர் குறிப்பிட்டார். அரசியல் அமைப்பின் 19வது திருத்தத்திற்கு அமைய, பிரதமர் கூடுதல் அதிகாரம் கொண்டவராக மாறியிருக்கிறார். இதனால். ஜனாதிபதியை நியமிப்பது பற்றி அன்றி, அடுத்த பிரதமரைத் தெரிவு செய்வது தொடர்பாக மக்கள் ஆர்வம் காட்ட வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்தார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 68வது நிறைவாண்டு நேற்று கொழும்பு சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது. இதன்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

நாட்டுக்குப் பொருத்தமான அரசியல் தலைவர்களை தெரிவு செய்வது அவசியமாகும். மத்திய வங்கிக் கொள்ளையுடன் தொடர்புடைய அனைவரும் தமது பதவியை இராஜினாமா செய்வது அவசியம் என அவர் சுட்டிக்காட்டினார். அர்ஜூன் மகேந்திரனை இலங்கைக்கு அழைத்துவர தேவையான சகல ஆவணங்களும் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. மக்கள் சார்பில் அரசியல் கூட்டணியை ஏற்படுத்தி, தமது கொள்கை, தொலைநோக்கு என்பனவற்றுடன் கூடிய அரசாங்கம் ஒன்று 2020ஆம் ஆண்டளவில் ஏற்படுத்தப்படும் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கூறினார். புதிய தாராண்மைவாத கொள்கை காலத்திற்கு பொருத்தமற்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மறுசீரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நிகழ்வில் கலந்து கொண்ட கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். கட்சிக்குள் அடிப்படை வாதத்திற்கோ இனவாதத்திற்கோ இடமில்லை என கட்சியின் உபதலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டார். சவால்கள் அனைத்தையும் வெற்றிகொண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வெற்றி இலக்கை நோக்கி கொண்டு செல்வதாக நிகழ்வில் உரையாற்றிய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த அமரவீர கூறினார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-28 | 19:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,807
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 500
புதிய நோயாளிகள் - 02
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 65
நோயிலிருந்து தேறியோர் - 2,296
இறப்புக்கள் - 11