பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக மிஸ்பா உல் ஹக் நியமிக்கப்பட்டுள்ளார்

Share Button

பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக மிஸ்பா உல் ஹக் நியமிக்கப்பட்டுள்ளார். மூன்று வருட ஒப்பந்தத்தின் அடிப்படையில் அவருக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டிருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கட் சபை அறிவித்திருக்கிறது. பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் வக்கார் யூனிஸ் அணியில் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
=========

இந்தியக் கிரிக்கட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஷ்வின், டெல்லி கெப்பிட்டல் அணிக்காக விளையாட தீர்மானித்துள்ளார். 2020ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஐபிஎல் கிரிக்கட் சுற்றுத்தொடரில் அஷ்வின் டெல்லி கெப்பிட்டல் அணி சார்பாக விளையாடுவார் என கிரிக்இன்போ இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. ரவிச்சந்திரன் அஷ்வின், கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணிக்காக 2018ஆம் ஆண்டில் ஏழு தசம் ஆறு கோடி ரூபா பெறுமதியான விலைக்கு ஏலத்தில் கொள்வனவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *