இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமது வரலாற்றில் புதியதொரு திருப்புமுனையை பதிவு செய்யவுள்ளது.

Share Button

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமது வரலாற்றில் புதியதொரு திருப்புமுனையை பதிவு செய்து, நவீன தொழில்நுட்பத்தின் ஊடாக நேயர்களை நெருங்கும் முயற்சியை ஆரம்பித்துள்ளது.

நாளை தொடக்கம் தேசிய வானொலியின் அலைவரிசைகளை நேயர்கள் திறன்பேசி ஊடாக செவிமடுக்க முடியும். திறன்பேசி பாவனையாளர்கள் தாம் பயன்படுத்தும் ஸ்மாட் போனுக்கு ஏற்ப கூகிள் பிளே-ஸ்டோர் அல்லது அப்-ஸ்டோர் சென்று ளுடுடீஊ என்ற செயலியை தரவிறக்கப்படுத்தி இன்ஸ்டோல்; செய்து கொள்வதன் மூலம் அலைவரிசைகளை செவிமடுக்கலாம். இந்த வழிமுறையின் மூலம் தமிழ் தேசிய சேவை, தென்றல், அடங்கலாக சகல அலைவரிசைகளையும் செவி மடுக்கக் கூடியதாக இருப்பது சிறப்பம்சமாகும்.

இந்த தொழில்நுட்ப பிரவேசமானது கடல் கடந்த நாடுகளில் வேலை செய்யும் இருபது இலட்சத்திற்கும் மேலான இலங்கை வானொலி நேயர்கள் தேசிய அலைவரிசைகளை இலகுவாக செவிமடுக்க வழிவகுக்கிறது. கூட்டுத்தாபனத்தின் தலைவர் மாலக தல்வத்தவின் எண்ணக்கருவுக்கு அமைய தேசிய வானொலி அலைவரிசைகளை இணையத்தின் மூலம் இலகுவாக கேட்கும் வாய்ப்பு கிடைக்கிறது.

இந்த திறன்பேசி செயலியை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி ஊடக மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் றுவன் விஜயவர்த்தன தலைமையில் நாளை பிற்பகல் 5 மணிக்கு குமாரதுங்க கலையகத்தில் இடம்பெறவுள்ளது;. அமைச்சின் செயலாளர் சுனில் சமரவீர, அரசாங்க தகவல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் நாலக களுவௌ, கூட்டுத்தாபன பணிப்பாளர் நாயகம் ஏரானந்த ஹெட்டியாராச்சி, செயற்பாட்டுப் பணிப்பாளர் ஹெரல் சேனாதீர உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Aug-06 | 08:08

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,839
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 291
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 68
நோயிலிருந்து தேறியோர் - 2,537
இறப்புக்கள் - 11