இலங்கை – துர்க்கமனிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உதைப்பந்தாட்டப் போட்டி இன்று

Share Button

இலங்கை – துருக்மனிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உதைப்பந்தாட்டப் போட்டி கொழும்பு ரீட் மாவத்தையில் உள்ள குதிரைப் பந்தயத் திடலில் இன்று இடம்பெறும். உலகக் கிண்ணப் போட்டிக்கும், ஆசியப் போட்டிக்கும் தகுதி பெறுவதற்கான இரண்டாம் சுற்றுப் போட்டியாக இது விளங்குகின்றது. இந்தத் தொடரின் மற்றுமொரு போட்டி நாளை மறுதினம் இலங்கை வடகொரியா அணிகளுக்கு இடையில் இடம்பெறும்.

2019 தேசிய பரா மெய்வல்லுனர் போட்டி இன்று சுகததாஸ மைதானத்தில் ஆரம்பமாகும். ஐம்பது விளையாட்டுக் கழகங்கள் இதில் போட்டியிடவுள்ளன. சுமார் எட்டாயிரம் வீர வீராங்கனைகள் இதில் பங்கேற்கின்றனர். தேசிய பராஒலிம்பிக் குழுவும், விளையாட்டு அலுவல்கள் அமைச்சும் இதனை ஒழுங்கு செய்துள்ளன.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *