பொதுத் தேர்தலை நடத்துவதற்கான பிரித்தானிய பிரதமரின் யோசனைக்கு அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு.

Share Button

பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன்; மூன்றாவது தடவையாக பாராளுமன்றத்தில் தோல்வியை சந்தித்துள்ளார். அடுத்த மாதம் பாராளுமன்ற தேர்தலை நடத்துவதாக கூறிய இவரின் கருத்து இலகுவாக முறியடிக்கப்பட்டுள்ளது. அவசர தேர்தலை நடத்துவதற்குத் தேவைப்படும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வெல்வதற்கு ஜோன்ஸனின் கொன்சர்வேட்டிவ் கட்சி தவறியுள்ளது. 434 வாக்குகள் தேவைப்பட்ட போதிலும், 298 வாக்குகள் மாத்திரமே அவரின் இந்தப் பிரேரணைக்குக் கிடைக்கப் பெற்றுள்ளது. பெரும்பாலானோர் வாக்களிப்பதிலிருந்து தவிர்ந்து கொண்டனர். இந்த தோல்வியை அடுத்து, பிரதமர் ஜோன்ஸன் தொழிலாளர் கட்சித் தலைவர் ஜெரமி கோபினை குறைகூறியுள்ளார். ஒரு பொதுத் தேர்தலுக்கு செல்வதற்கான அழைப்பை மறுத்துள்ள பிரித்தானிய வரலாற்றின் முதலாவது எதிர்க்கட்சித் தலைவராக கோபின் விளங்குவதாக அவர் கூறியுள்ளார்.

ஒக்டோபர் 31ம் திகதிக்குள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியாவை வெளியேற்றுவது பிரதமர் ஜோன்சனின் முயற்சியாக அமைந்துள்ளது. 2020ம் ஆண்டு ஜனவரி 31ம் திகதி வரை ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதை தாமதப்படுத்துமாறு பிரதமரை வலியுறுத்தும் சட்டமூலமொன்றை நிறைவேற்றும் முயற்சியில் பாராளுமன்ற உறுப்பினர்கள் களமிறங்கியுள்ளனர். இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் ஒக்டோபர் 15ம் திகதி தேர்தல் நடத்தப்படும் என பிரதமர் ஜோன்சன் குறிப்பிட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *