பூஜித் ஜயசுந்தரவின் சத்திய கடதாசிக்கு சட்டமா அதிபர் கடும் விமர்சனம்.

Share Button

கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உயர் நீதிமன்றத்தில் முன்வைத்துள்ள சத்தியக் கடதாசியை நீக்குமாறு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா நேற்று கோரிக்கை விடுத்துள்ளார். இந்த சத்தியக் கடதாசி மூலம் பூஜித் ஜயசுந்தர தன்னை தேவையற்ற வகையில், குற்றம் சாட்டியிருப்பதாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றில் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியும், அரச உளவுப் பிரிவு பணிப்பாளரும், தானும் இணைந்து பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிராக குற்றவியல் குற்றச்சாட்டுக்களை முன்வைக்க சதித்திட்டம் தீட்டுவதாகக் கூறி, கடந்த ஜூலை மாதம் 17ஆம் திகதி இந்த சத்தியக் கடதாசி முன்வைக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார். தனக்கு எதிராக இவ்வாறு தவறான குற்றச்சாட்டை முன்வைப்பது அரசாங்கத்தின் பிரதான சட்டத்தரணி என்ற வகையில் தனது நற்பெயருக்கு பாதிப்பாக அமைந்துள்ளதென சட்டமா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *