செலவினத்தை அதிகரிக்காமல் ஆரம்ப மிகைப் பெறுமானத்துடன் வரவு செலவுத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும் என பிரதமர் பாராளுமன்றத்தில் தெரிவிப்பு.

Share Button

தேவையற்ற செலவினங்களைக் குறைத்து ஆரம்ப மிகைப் பெறுமானத்துடன் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்துப் பேசும் போது பிரதமர் இதனைத் தெரிவித்தார். நாட்டின் சிக்கல் நிலைமைகளை மிகவும் வினைத்திறனாக சமாளிக்க அரசாங்கத்தால் முடிந்திருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார். நாட்டின் பொருளாதார நிலை தற்போது பாதுகாப்பாகவும் நல்ல நிலைமையிலும் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
எதிர்வரும் வருடங்களில் தொல்பொருளியல் துறையில் பாரிய அபிவிருத்தியை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நாட்டின் கலாசார மரபுரிமைகளைப் பாதுகாக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்.. நான் காலை நான்கு மணிக்கு எழுந்து இரவு 12 மணிக்கு தூங்குவேன். அது பிஸ்னஸ் செய்வதற்காக அல்ல. இலஞ்சம் வாங்குவதற்காக அல்ல. வேலை செய்வதற்காகவே பாடுபடுகிறேன். நீங்கள் ஏன் நியாயம் அற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறீர்கள். நான் பௌத்தனாக இருக்கிறேன். அதில் போலித்தனம் இல்லை. ஆதனை நீங்கள் வணக்கஸ்தலங்களில் காணலாம். இந்த வருடம் ஆயிரம் பௌத்த அறநெறிப் பாடசாலைகளை அமைப்பது எனது இலக்கு எ;னபதை வலியுறுத்திச் சொல்கிறேன் என்று குறிப்பிட்டார்.
சஜித் பிரேமதாசவினால் புதிய அரசியல் கலாசாரத்தை இலங்கையில் ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாக அமைச்சர் சுஜீவ சேனசிங்ஹ குறிப்பிட்டார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *