எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்காக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளர்

Share Button

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்காக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்தவுள்ளதாக கட்சியின் ஊடகப் பேச்சாளர் பாராளுமன்ற உறுப்பினர் வீரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். எனினும் போட்டியிடும் வேட்பாளர் இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர பத்திரிகை ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். இது வெறும் தீர்மானமாக மாத்திரமே அமைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *