காஷ்மீர் மீது விதிக்கப்பட்டுள்ள மட்டுப்பாடுகளை தவிர்க்குமாறு அமெரிக்கா இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Share Button

காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட வேண்டும் என்று அமெரிக்க அரசாங்கம் இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. காஷ்மீர் பிராந்தியத்தின் தற்போதைய நிலை பற்றி கவலை அடைவதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அறிவித்திருக்கிறது. அரசியல் மற்றும் வர்த்தகப் பிரமுகர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை, மக்கள் மீதான மட்டுப்பாடுகள் என்பனவும் கவலையை ஏற்படுத்தியிருப்பதாக திணைக்களத்தின் பேச்சாளர் மோர்கன் ஓட்டாகஸ் தெரிவித்துள்ளார். காஷ்மீர் பிராந்தியத்தில் மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்குமாறும், இணைய மற்றும் கைத்தொலைபேசி சேவைகளை வழமைக்குக் கொண்டுவருமாறும் அவர் இந்திய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *