சந்திரனுக்கு ஏவப்பட்ட இந்தியாவின் சந்திராயன்-2 என்ற விண்வெளி ஓடத்தின் தரையிறக்கம் இறுதிகட்டத்தில் தோல்வி

Share Button

பெரும் எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் சந்திரனுக்கு ஏவப்பட்ட இந்தியாவின் சந்திராயன்-2 என்ற விண்வெளி ஓடத்தின் தரையிறக்கம் இறுதிகட்டத்தில் தோல்வி அடைந்திருக்கிறது.

சந்திரனில் தரையிறக்குவதற்கு இரண்டு கிலோமீற்றர்கள் மாத்திரமே எஞ்சியிருந்த நிலையில் விண்வெளி ஓடத்துடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விண்வெளி ஓடம் தரையிறங்குவதற்கு ஒரு சில செக்கன்கள் மாத்திரம் எஞ்சியிருந்த நிலையில் அதனுடான தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. சந்திரனின் தென் துருவத்தில் ஆய்வுகளை மேற்கொள்ளும் நோக்குடன் சந்திராயன்-2 என்ற விண்வெளி ஓடம் விண்ணுக்கு அனுப்பப்பட்டிருந்தது.

இந்த விண்வெளி ஓடம் சந்திரனில் தரையிறக்கும் காட்சியை பார்வையிடுவதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோதியும் தயாராக இருந்தார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11